கிரிக்கெட் விளையாட எதிர்ப்பு! சேப்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு!!

சென்னை:சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிக்காக 3அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சாதாரண போலீசார், அதிரடிப்படையினர், கமாண்டோ படையினர் என்று மூன்றடுக்கில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் போக்குவரஹ்து பணிகளை கண்காணிக்க போக்குவரத்து ஆணையாளர் அருண் தலைமையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மைதானத்தை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் போலீசார் சீல் வைத்துள்ளனர்.பலத்த சோதனைக்குபின் டிக்கெட் வைத்துள்ள ரசிகர்கள் மட்டுமே மைதானம் சாலையில் அனுமதிக்கப்படுவார்கள்.
கருப்புநிற ஆடைகள், பொருட்கள் வைத்திருந்தால் மைதானத்துக்குள் அனுமதியில்லை.
கொடி, குடை, பதாகை, தண்ணீர் பாட்டில், செல்போன், கேமராஆகியவற்றையும் மைதானத்துக்கு எடுத்துவர அனுமதி இல்லை. இனவெறி தூண்டும்வகையில் கோஷம் போட தடை, மைதானத்தில் நுழைந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

அண்ணா சாலையிலிருந்து வாலாஜா சாலை., திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலை., கடற்கரையிலிருந்து பைகிராப்ட்ஸ் சாலை., கடற்கரையில் இருந்து உழைப்பாளர் சிலை வழியாக மைதானம் செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இத்தகைய பாதுகாப்பு இடையே, சென்னை சூப்பர்கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here