சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட்! நிர்வாகம் உறுதி! எதிர்ப்பும் தீவிரம்!!

சென்னை: காவிரி போராட்டம் காரணமாக சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை இடம்மாற்ற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி வாரியம் அமைக்க மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது.இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் தொடர்போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.இப்போட்டியை ஒத்திவைக்குமாறு தமிழர் வாழ்வுரிமை கட்சி, திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பல அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
போட்டிகள் இடம் மாற்ற வாய்ப்புள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் நிர்வாகி ராஜிவ்சுக்லா, சென்னையில் நடைபெறும் போட்டிகள் இடமாற்றம் செய்யப்படாது என்று தெரிவித்துள்ளார்.  இதனால் சென்னையில் திட்டமிட்டபடி 7போட்டிகளும் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

விளையாட்டில் இருந்து அரசியலை ஒதுக்கிவையுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன்,  மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படவேண்டும் என்றார்.
இல்லாவிடில், ரசிகர்களாக மைதானத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். வெளியே செல்லும் தமிழக அணி வீரர்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஊழல்களை அம்பலமாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.கிரிக்கெட் போட்டியை இடம் மாற்றவேண்டும் என்று திரைப்பட இயக்குநர்கள் வலியுறுத்தியுள்ளனர். போட்டியை காணச்செல்லாமல் புறக்கணியுங்கள் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here