காவிரி போராட்டம் புறக்கணிப்பு! அஜீத், நயன்தாராவுக்கு கண்டனம்!!

சென்னை: காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ் திரைக்கலைஞர்கள் மவுன போராட்டம் நடத்தினர்.
அதில் முன்னணி கதாநாயகரான அஜித், கதாநாயகி நயன்தாரா பங்கேற்கவில்லை.
இது கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.முன்னணி நடிகரான அஜித், நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்கிறார்.
ஜெயலலிதா இறந்ததும் வெளிநாட்டில் இருந்து உடனடியாக சென்னை வந்து, நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். நடிகை ஸ்ரீதேவியின் பதினாறாம் நாள் காரியத்திலும் கலந்து கொண்டார்.காவிரி, ஸ்டெர்லைட் போராட்டம் என்றால் ஏன் தயங்குகிறார்.
இவ்வாறு அவர் மீதும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.அறம் படத்தில் கலெக்டராக நடித்துள்ள நயன் தாரா, தண்ணீர் பிரச்சனைக்காக குரல் கொடுத்துள்ளார்.
ஆனால், நிஜ போராட்டத்தில் ஒதுங்கியுள்ளார்.
15 வருடங்களாக ஹீரோயினாக நீடிக்க வைத்திருக்கும் தமிழ் ரசிகர்களுக்காகவும், தன்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காகவும் நேரடியாகக் குரல் கொடுக்க மாட்டாரா? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here