காவிரி வாரியம் வழக்கு! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!

டெல்லி:காவிரி மேலாண்மை வாரியம் ஸ்கீம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்தது உச்சநீதிமன்றம்.
மே.3ம் தேதிக்குள் ஸ்கீமை கொண்டு வாருங்கள் என்றும் உத்தரவிட்டுள்ளது.
காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ல் தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற செயல்திட்டம் – ஸ்கீம் ஒன்றை 6வாரத்துக்குள் அமைக்க கூறியிருந்தது.
மத்திய அரசு ஸ்கீம் என்பதற்கான விளக்கம்கோரி மீண்டும் நீதிமன்றத்தை அணுகியது.
6வாரம் கழிந்து மத்திய அரசின் இந்நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு என்று தமிழக அரசு வாதாடியது.
இன்று விசாரணைக்கு வந்த அவ்வழக்கில் நீதிபதிகள் கூறியதாவது:உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை மத்திய அரசு நடைமுறைப் படுத்தவில்லை.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான திட்டத்தை மார்ச் 29-ம் தேதிக்குள் ஏன் செயல்படுத்தவில்லை.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் அரசுக்கு என்ன பிரச்சனை.
நதிநீர் பிரச்சனையில் ஒவ்வொருமுறையும் நீதிமன்றத்தை அணுகு உத்தரவு பெறுவது சரியல்ல. எனவே செயல்திட்டம் தேவை என்று தீர்ப்பில் குறிப்பிட்டோம். நடுவர் மன்றத்தின் தீர்ப்பை இணைத்தே உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.
எனவே, காவிரி நீர்பங்கீடு தொடர்பான மேலாண்மை தொடர்பான வரைவு திட்டத்தை மே.3க்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும்.                                       

கர்நாடகா, தமிழகத்தில் அமைதி நிலவுவதை மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதிசெய்யவேண்டும்.
என்றுகூறி வழக்கு விசாரணையை மே.3ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here