சூறைக்காற்றால் மதரசா பள்ளிக்கூடம் சேதம்!! தீரத்துடன் நண்பர்களை காப்பாற்றியவர் மரணம்!!

ஹரியானா: சூறைக்காற்றால் சேதமடைந்த மதரசா பள்ளியில் இருந்து உயிரை பொருட்படுத்தாமல் சகமாணவர்களை காப்பாற்றியவர் உத்தரம் இடிந்து விழுந்து படுகாயமடைந்து இறந்தார்.ஹரியானாவை அடுத்துள்ள நல்ஹி நகரில் மதரசா இயங்கிவருகிறது.
கடந்த சனிக்கிழமை அந்நகரில் சூறைக்காற்று வீசியது.
இதனால் ஆஸ்பெஸ்டாஸ் கூரை பெயர்ந்துவந்து மதரசாவில் மோதியது.அதில் மதரசா பள்ளி கட்டிடம் இடிந்தது. அங்கு தங்கி படித்துவந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்களை இடிபாடுகளில் சிக்காமல் காப்பாற்றி வெளியேற்றினார் அஸ்பக்(17) என்ற மாணவர்.
சரிந்துவிழும் உத்தரம் மற்றொரு மாணவர் மீது விழாமல் இருக்க அஸ்பக் முயன்றபோது உத்தரம் இவர் மீது சரிந்துவிழுந்து படுகாயம் ஏற்பட்டது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் அஸ்பக் இறந்தார்.
அவர் உடல் சொந்த கிராமமான பும்பாஹரியில் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுவந்தனர்.அஸ்பக் தீரத்துடன் செயல்பட்டு மதரசா மாணவர்களை காப்பாற்றி இருக்காவிட்டால் உயிர்ச்சேதம் ஆகியிருக்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார் மதரசா நிர்வாகி.
ஹரியானா வக்ப் வாரியம் அஸ்பக் குடும்பத்துக்கு ரூ.2லட்சம் உதவி அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here