பாஜக எம்.எல்.ஏ. மீது பலாத்கார புகார்! முதல்வர் வீடுமுன் பெண் தீக்குளிக்க முயற்சி!!

லக்னோ: பாஜக எம்.எல்.ஏ பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்று முதல்வர் வீட்டுமுன் இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்துக்கு வந்தார்.
அவர் திடீரென்று தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.இது குறித்து அந்த பெண் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ மற்றும் அவரது நண்பர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர்.
இதுதொடர்பாக எங்கள் குடும்பத்தினரை மிரட்டி வருகின்றனர்.
போலீசாரிடம் இது குறித்து பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசாரும் எங்களை மிரட்டுகின்றனர்.குற்றவாளிகள் அனைவருக்கும் உரிய தண்டனை பெற்று தர வேண்டும்.
இல்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன் என்றார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here