போலீசுடன் நள்ளிரவில் ரகளை செய்த போதைப்பெண்!

ஹைதராபாத்: காதலனை போலீஸ் பிடியில் இருந்து காப்பாற்ற நள்ளிரவில் பெண் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் திரைப்பட ஸ்டூடியோக்கள் உள்ளன.

அப்பகுதியில் சில முன்னணி நடிகர்களின் வீடுகளும் உள்ளன.
நேற்றிரவு அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
வேகமாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தினர்.
காரை ஓட்டி வந்தவர் சரியான போதையில் இருந்தது தெரிய வந்தது.அவர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்தனர்.
அவருடன் காரில் வந்த பெண் இறங்கி போலீசுடன் சண்டையிட்டார்.
அவரும் போதையில் இருப்பதைப்போன்று காணப்பட்டார். அதனை விடியோ எடுத்த பத்திரிகையாளர்கள் மீது கல்வீசி தாக்கினார்.

போலீசார் காரை கைப்பற்றினர். காரில்வந்த இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here