காவிரி வாரியம் உடனே அமைக்கவேண்டும்! தமிழ் திரையுலகினர் அறவழிப்போராட்டம்!!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, சென்னையில் தமிழ் திரையுலகினரின் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், இயக்குநர் ஷங்கர் உள்பட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 மணியளவில் அறவழிப் போராட்டம் தொடங்கியது.
நடிகர்கள் விஜய், விஷால், விஜய் சேதுபதி, சத்யராஜ், சிவகார்த்திகேயன், பார்த்திபன், சூர்யா, கார்த்தி, சிவகுமார் உள்ளிட்டோரும், நடிகைகள் தன்ஷிகா, வரலட்சுமி, ஸ்ரீப்ரியா, ரேகா உள்ளிட்டோரும் காலையிலேயே போராட்டக்களத்துக்கு வந்தனர்.
இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், செல்வமணி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா, சங்கர்கணேஷ், நகைச்சுவை நடிகர்கள் செந்தில், ரமேஷ்கண்ணா ஆகியோர் அறவழிப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர், ஃபெப்சி ஊழியர்களும் பங்கேற்றனர்.
நடிகர் சங்க நிர்வாகி நாசர் போராட்டத்தை துவக்கி பேசினார்.
கூட்டத்தின் முடிவில் பேசிய நடிகர் சத்யராஜ், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும் முழக்கமிட்டார்.நிகழ்ச்சியில் கமலும், ரஜினியும் அருகருகே அமர்ந்து நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here