காவிரி போராட்டம் தீவிரம்! பிரதமர் மோடி தமிழகம் வருகை!

சென்னை: காவிரி போராட்டம் தீவிரமாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திரமோடி இம்மாதம் 12ம் தேதி சென்னை வருகிறார்.மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி நடைபெறுகிறது.
ஏப்ரல்11ம் தேதி புதன்கிழமை தொடங்கி 14ம் தேதி வரை 4 நாட்கள் கண்காட்சி நடைபெறுகிறது.
12ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிடுகிறார்.12ம் தேதி காலை 6.40 மணிக்கு தில்லியிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு 9.20க்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் செல்கிறார்.காலை பத்து மணி முதல் 12மணிவரை ராணுவகண்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்னர் அடையாறு புற்றுநோய் மையம் வைரவிழா கட்டிட தொடக்கவிழாவில் பங்கேற்று டெல்லி திரும்புகிறார்.
காவிரி வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதம் செய்வதை கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.திமுக பிரதமரை எதிர்த்து கருப்புக்கொடி காட்டும் போராட்டம் அறிவித்துள்ளது.
பிரதமர் ஹெலிகாப்டரில் சென்றாலும் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என்று திமுக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here