செல்ல நாய்க்கு ஆசை முத்தம்! 70வயது முதியவரின் கடைசி ஆசை!!

ஸ்காட்லாந்து: நியூகாஸ்டில் நகரை சேர்ந்தவர் பீட்டர் ராப்சன்(70).
நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனில்லை.
ஒருவாரம் அவர் உயிர்வாழ வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் தேதி குறித்தனர்.
இருப்பினும் நியூகாஸ்டில் நகரில் புகழ்பெற்ற நைன்வெல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.பீட்டர் ஆசையாக வளர்த்துவந்த செல்லநாயை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அனைவருக்கும் ஆச்சர்யம் ஏற்பட்டது. பீட்டரின் மனைவி 8ஆண்டுக்கு முன் இறந்தார்.
அதன்பின்னர் பெண் நாய் ஒன்றை அவர் வளர்க்க தொடங்கினார்.
அவரது மனைவியின் செல்லப்பெயரான ’ஷெப்’-ஐ அந்நாய்க்கும் வைத்து வளர்த்தார்.

மருத்துவமனைக்குள் அதுவும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் நாய்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
இருந்தபோதும் பீட்டர் ராப்சனின் இறுதி ஆசை இது என்பதால் சிறப்பு அனுமதி கிடைத்தது.
செல்ல நாய் ஷெப் அவரைப்பார்த்ததும் வாலாட்டி குழைந்தது.


அதற்கு ஒரு முத்தம் கொடுத்து ஆதரவுடன் தடவிவிட்டார் பீட்டர்.
அடுத்த இருபது நிமிடங்களில் அவர் உயிர்பிரிந்தது.
இச்சோகசம்பவத்தை இணையத்தில் வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், ஒரு முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய திருப்தி தங்கள் மருத்துவமனைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here