சிரியாவில் விஷவாயு தாக்குதல்! கொத்து கொத்தாய் குழந்தைகள் பலி!!

சிரியா: சிரியாவில் உள்ள டவ்மா நகரில் அரசுப்படைகள் விஷவாயு தாக்குதல் நடத்தியதில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு முதலுதவி பெற்று வருகின்றனர்.

சிரியாவில் பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நகரங்களை படிப்படியாக அரசு மீட்டு வருகிறது. கிழக்கு பகுதியில் உள்ள டவ்மா நகர் மட்டும் பயங்கரவாதிகள் பிடியில் இருந்தது. 

ஞாயிற்றுக்கிழமை அந்நகரில் திடீரென்று அரசு கூட்டுப்படைகள் தரைவழி, வான்வழி தாக்குதலை ஒரேநேரத்தில் நடத்தின. விஷவாயு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் அங்கிருந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 70குழந்தைகள் உள்ளிட்ட நூறு பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷவாயுவால் பாதிக்கப்பட்டு  மூச்சுத்திணறல், வாயில் நுரை தள்ளுதல் போன்ற அவதிகளுக்காக ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.           அந்நகரை தங்கள் பிடியில் வைத்திருந்த பயங்கரவாதிகள் விஷவாயு தாக்குதல் என்று பொய்யான தகவல்களை பரப்புவதாக சிரியா அரசு தெரிவித்துள்ளது.
விஷவாயு  தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று சிரியா கூட்டுப்படையில் இடம்பெற்றுள்ள ரஷ்யாவை அமெரிக்கா கண்டித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here