சதீஷ் நடிக்கும் திகில் படம்! அனீஸ் இயக்குகிறார்!!

பெங்களூர்: அனீஸ் இயக்கத்தில் லூசியா பட ஹீரோ சதீஷ் நீனசம் நடிக்கும் படம் விரைவில் தொடங்க உள்ளது.
இந்த திரில்லர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப் போவதாக ஹீரோ சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.நான்கு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான படம் லூசியா. சதீஷ் நீனசம், ஸ்ருதி ஹரிஹரன் நடித்திருந்த இந்தப் படம் சக்கை போடு போட்டது. இதற்குப் பின்னர் கன்னட திரை உலகில் சதீஷ் கிராப் எக்கச் சக்கமாக எகிறியது. 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாகி விட்டார் சதீஷ்.
திருமணம் என்னும் நிக்ஹாக் படத்தை இயக்கிய அனீஸ் தனது அடுத்த படத்திற்கு சதீஷ்தான் ஹீரோ என்று முடிவு செய்தார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து திரில்லர் கதை ஒன்றை 2ஆண்டுகள் செலவிட்டு எழுதியுள்ளார்.
நான் நடித்த லூசியா படத்தைப் பார்த்துவிட்டு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தன. நல்ல கதையில் அறிமுகமாக வேண்டும் என்பதற்காக காத்திருந்தேன்.
அனிஸ் சொன்ன கதை பிடித்து போனதால் நடிக்க சம்மதித்தேன் என்கிறார் சதீஷ். தமிழில் டப்பிங் பேச வேண்டும் என்பதற்காக டியூசன் எல்லாம் கற்றுக்கொள்கிறாராம்.உலக புகழ்பெற்ற காவியத்தையும், இதுவரை பதிவு செய்யப்படாத ஓர் உண்மை சம்பவத்தையும் மையமாகக்கொண்டு உருவாகும் இந்த படத்துக்கு இன்னமும் பெயரிடப்படவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
அனீஸ் இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். எடிட் செய்கிறார் காசி விஸ்வநாதன். என் .சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here