அரைநிர்வாண போராட்டம்! பிரபல நடிகை கைது!!

ஹைதராபாத்:தெலுங்கு சினிமா உலகில் நடிகைகள் ஜாதி பிரச்சனை, பாலியல் தொல்லை ஆகியவற்றை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக, நடிகைகளில் 90 சதவிகிதம் பேர் பல்வேறு தொல்லைகளை சந்திக்கின்றனர்.
இதுகுறித்து பேஸ்புக், ட்விட்டரில் பரபரப்பாக போஸ்ட் போட்டு வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி.நடிகைகளுக்கு தொல்லை கொடுப்பவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்று கூறிய தனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று முகநூலில் சமீபத்தில் இவர் தெரிவித்திருந்தார்.
சினிமா கலைஞருக்கான அங்கீகார அட்டையை தனக்கு கொடுக்க மறுப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

நடிகைகளை படுக்கை அறைக்கு அழைப்பதாக கூறிய புகார் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தெலுங்கு பட உலகம் அமைதியாக இருப்பதாக கூறி இதைக் கண்டித்து இன்று ஆந்திரா திரைப்பட வர்த்தக சபை முன்பு மேலாடையின்றி போராட்டம் நடத்தினார் ஸ்ரீ ரெட்டி.இது தெலுங்கு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் ஸ்ரீ ரெட்டியைக் கைது செய்தனர்.
ஸ்ரீரெட்டியின் போராட்டம் தெலுங்கு திரை உலகத்தை மட்டுமல்ல தென்னிந்திய சினிமா உலகையே பரபரக்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here