பணத்திற்காக 11 மாத குழந்தையை விற்ற தாய்!

கோவா: பாட்டீல் என்பவரது மனைவி ஷாய்லா பாட்டீல். இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை உள்ளது.பாட்டீலின் கணவர் அவரை வறுமை நிலையிலேயே வைத்திருந்ததால் பணத் தேவைக்காக குழந்தையை விற்க முடிவு செய்தார் ஷாய்லா பாட்டீல். இது குறித்து ஷாய்லா பாட்டீல் தனது நண்பர்களானகோசாவி மற்றும் தமாஜியிடம் குழந்தையை விற்க உதவும்படி கேட்டுள்ளார்.கோசாவி மற்றும் தமாஜி ஆகிய இருவரும் மோர்ஜேவை தொடர்பு கொண்டனர். மோர்ஜே திருமணமானவர். ஆனால் குழந்தையில்லை. இதனால் குழந்தையை வாங்க சம்மதித்துள்ளார்.கடந்த மார்ச் 23 அன்று குழந்தையை விற்கும் இச்சம்பவம் நடந்துள்ளது.வீடு திரும்பிய பாட்டீல் குழுந்தைஇல்லாததை கண்டு அதிர்ச்சியுற்றார். மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இச்சம்பவத்தில் ஈடுபட்ட தாய் உட்பட 4பேரையும் கைது செய்துள்ளதாக பாண்டா காவல் நிலைய ஆய்வாளர் ஹரீஷ் மட்காய்கர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here