துபாய் லாட்டரியில் இந்தியருக்கு ரூ21 கோடி பரிசு!

துபாய்: ஜான் வர்கீஸ் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். 2016 ஆம் ஆண்டு முதல்
இவர் அபுதாபி நகரில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக இருக்கிறார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அபுதாபி விமான நிலையத்தில் லாட்டரி டிக்கெட் விற்பனை நடந்தது. அதில் ஜான் வர்கீஸ் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார்.சில நாட்களுக்கு முன் நடந்த குலுக்கலில் ஜான் வர்கீசுக்கு இந்திய மதிப்பில் ரூ.21.20 கோடி பரிசு கிடைத்திருந்தது.இது குறித்து வர்கீஸ் கூறும்போது நான் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு கிடைத்து இருக்கிறது என்றவுடன் என்னால் நம்பமுடியவில்லை.என்னை ஏப்ரல் முட்டாள் ஆக்குகிறார்கள் என்று நினைத்தேன். இது தொடர்பாக வந்த தொலைபேசி அழைப்பையும் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால், எனது நண்பர்கள் லாட்டரி அலுவலகத்துக்கு அழைத்து உறுதி செய் என்றனர். லாட்டரி அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட பிறகுதான் எனக்கு பரிசு கிடைத்திருப்பது தெரியவந்தது.எனக்கு கிடைத்த இந்தபரிசுப் பணத்தை எனது நண்பர்கள் 4 பேருக்கு சமமாக பிரித்துத் தர விரும்புகிறேன். என் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இந்த பணத்தை முதலீடு செய்வேன். அவர்களுக்கு சிறந்த கல்வியை கொடுப்பேன். மற்றவர்களுக்கும் உதவுவேன்என்று வர்கீஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here