காமன்வெல்த் விளையாட்டு போட்டி! தங்கம் வென்றார் தமிழக வீரர்!!

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றவருகிறது.இதில் ஆண்கள் பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார்.ஆண்கள் பளு தூக்குதல் போட்டியின் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் கலந்து கொண்டார். பளுதூக்குதல் பிரிவில் மொத்தமாக 317 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார்.வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் சதீஷ்சிவலிங்கம்.கடந்த 2014 ம்ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என
மொத்தம் 5 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here