கேட்டது காவிரி! வந்திருப்பது துணை வேந்தர்!!

சென்னை: நடிகரும் அரசியல்வாதியும் ஆன மக்கள் மய்யம் தலைவா் கமல்ஹாசன்
தனது டுவிட்டரில் துணைவேந்தர் பற்றிய கருத்தை வெளியிட்டிருந்தார்.கா்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீா் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள்.தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா?
சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?உடனே ஆங்கிலத்தில் மற்றொரு பதிவை வெளியிட்டார். அதில் உண்மையில் கர்நாடகத்தைச் சேர்ந்த நாகேஷ் என் குருநாதர்களில் ஒருவர், என் நண்பர்கள் ராஜ்குமார் அண்ணா, சரோஜாதேவி, ரஜினிகாந்த் மற்றும் திரு அம்பரீஷ் போன்றவர்கள் என் சொந்தங்கள். மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கை குறித்த என் நகைச்சுவை அது. துணைவேந்தர் மீதான சாடல் அல்ல.எப்படியிருந்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் தேவை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here