எதிர்கட்சிகளை விலங்குகளுடன் ஒப்பிட்டு பேசிய அமித்ஷா!

மும்பை: பாஜகவின் 38ம் ஆண்டு நிறுவன நாள் மும்பையில் நடந்தது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட மாநாட்டில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பேசினார்.நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது அதற்கு தயாராகும் நேரம் நெருங்கிவிட்டது. பிரதமர் மோடியின் 4 ஆண்டுகால சாதனைகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மக்களுக்கு எடுத்துக் கூறவேண்டும்.பா.ஜ.க மீண்டும் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்த்தி மோடியின் கனவான புதிய இந்தியாவை படைக்க தொண்டர்கள் உறுதியேற்க வேண்டும். பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்களிலும் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்ற வேண்டும்.பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகின்றனர். வெள்ள பெருக்கின் போது பூனைகள், பாம்புகள், குரங்குகள், என ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற விலங்குகள் உயிர் பிழைக்க ஒரே இடத்தில் கூடும்.அதுபோலவே, நரேந்திர மோடி எனும் வெள்ளம் அரசியலில் பெருக்கெடுத்ததன் விளைவாக எதிர்க்கட்சிகள் தங்களை காத்துக்கொள்ள கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது என ஆவேசமாக பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here