போதையில் வகுப்பறையில் புரண்ட ஆசிரியர் சஸ்பெண்ட்!!

சிவகங்கை: சிவகங்கை பூவந்தி கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு 8 ஆசிரியைகள் உட்பட13 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக திருவேகம்பத்து கிராமத்தை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் குடி போதையில் பள்ளிக்கு வந்துள்ளார்.
ஓய்வு அறைக்கு சென்ற அவரை உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் கண்டித்தனர்.
நிற்க கூட முடியாமல் ஆசிரியர் ரஜினிகாந்த் அறையிலேயே கீழே விழுந்து குடிபோதையில் உருண்டார்.மாணவா்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேணடிய உடற்கல்வி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பெற்றோரும், கிராம மக்களும், கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, முதன்மைக் கல்வி அதிகாரி, உடற்கல்வி ஆசிரியர் ரஜினிகாந்தை பணியிடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here