பல்கலைக்கழகங்களை காவியாக்கவில்லை கல்வி மயமாக்கவே முயல்கிறோம்

சென்னை: பல்கலைக்கழகங்களை காவியாக்கவில்லை, கல்வி மயமாக்கவே முயல்கிறோம். கல்வியில் அரசியலை புகுத்தாதீர்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.பாஜக வின் நிறுவன நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.காவிரி உரிமையை பறிகொடுத்தவர்களே அதற்காக போராடுகிறார்கள். தமிழகத்தை வன்முறைக்களமாக மாற்றி வருகின்றனர். தமிழகத்தை போராட்ட களமாக மாற்றுகிறார்கள். ஒரு சில வாரங்கள் மட்டுமே அவகாசம் கேட்கிறோம். தமிழக உரிமையை பாஜக மீட்டெடுக்கும். காவிரி பாய்ந்தோடத்தான் போகிறது
என்பதில் மாற்றமில்லை.அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பாகுபாடு காட்டப்படவில்லை.
பல்கலைக்கழகங்களை காவியாக்கவில்லை. கல்விமயமாக்கவே முயல்கிறோம். திறமை அடிப்படையிலேயே துணைவேந்தர் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதில் அரசியலை புகுத்தாதீர்கள் தகுதியான சூரப்பா நியமனத்தை அண்ணா பல்கலைகழக ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here