உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக நடிக்கிறார் கார்த்திக்!

சென்னை: சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்துள்ளார்.உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் அட்லீயின் உதவியாளர் ஈநாக் இயக்குகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கிறார். இதில் பிரியா பவானிசங்கர், இந்துஜா என இரண்டு ஹீரோயின்கள்.இந்தப் படத்தில், உதயநிதிக்கு அப்பாவாக கார்த்திக் நடிக்கிறார். தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தம் முடிந்தபிறகு இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. திரு இயக்கத்தில் மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் கார்த்திக் தனது மகன் கார்த்திக்கௌதமிற்கு அப்பாவாக நடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here