வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து! 12 பெண்கள் பரிதாப பலி!!

தெலங்கானா: வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12பேர் இறந்தனர். 15பேர் காயமுற்றனர்.தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்லா அருகே இத்துயர சம்பவம் நடந்துள்ளது. அங்கு விவசாய பணிக்காக கூலி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

வாடிபட்லா அருகே நிலைதடுமாறிய டிராக்டர் எம்.ஆர். கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

அதில் டிராக்டரில் வந்த 12பெண்கள் நீரில் மூழ்கி இறந்தனர். அவர்கள் டிராக்டரின் அடியில் சிக்கிக்கொண்டதால் மூச்சுத்திணறி இறந்தனர். 15பேர் காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.டிராக்டர் டிரைவர் போதையில் இருந்ததால் விபத்து நடந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here