கத்தார் ராணுவத்தில் பெண்களுக்கு அனுமதி!

கத்தார்: பெண்களை ராணுவத்தில் சேர்க்க கத்தார் அரசு முன்வந்துள்ளது. அந்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.சவுதி அரேபியா புரட்சிகரமான நாடு என்று தன்னை காட்டிக்கொள்ளும் பொருட்டு பல்வேறு சலுகைகளை பெண்களுக்கு வழங்கி வருகிறது.   பெண்ணடிமைத்தனம், மூடத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்நடவடிக்கைகள் உள்ளன.
அதற்காக பட்டத்து இளவரசர் சல்மானுக்கு உள்நாட்டிலும் உலக நாடுகளிலும் பாராட்டு குவிந்து வருகிறது.


இந்நிலையில், பெண்களுக்கு சமத்துவம் அளிக்கும் திட்டத்தை கத்தார் அரசும் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நாட்டு அரசர் சமீபத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அரசு விடுத்துள்ள அறிக்கையில், கத்தார் ராணுவத்தில் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
கத்தாரில் 18முதல் 35வயதுக்குள் இளைஞர்கள் கட்டாய ராணுவ சேவை பார்த்து வருகின்றனர். ஓராண்டு அவர்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். இல்லாவிடில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.


ஆனால், பெண்கள் ராணுவசேவையில் சேர்வது முழுவதும் அவர்களது விருப்பத்துக்குரியது.
18வயதுள்ள பெண்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேரலாம். 3 மாதங்கள் அவர்கள் ராணுவ சேவையில் ஈடுபடலாம் என்று கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here