பார்லிமெண்ட் முடக்கம்! பாஜக உண்ணாவிரதம்!!

டெல்லி: மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம்கட்ட நிகழ்வுகள் எதுவும் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை.தமிழகம், தெலங்கானா, ஆந்திரா எம்.பி.க்கள் அவையை முடக்கினர். பிற கட்சிகளும் இதற்கு ஆதரவு அளித்தன. 23நாட்கள் அவை நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.இந்நிலையில், பாஜக எம்பிக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை குறிப்பாக காங்கிரஸ் கட்சியை கடுமையாக கண்டித்தார். அக்கட்சி பிரித்தாளும்சூழ்ச்சி செய்வதாக தெரிவித்தார்.நாடாளுமன்றத்தை முடக்கியதற்காக அக்கட்சிக்கு பதிலடி தரும் வகையில் பாஜக எம்பிக்கள் ஏப்.12ம் தேதி உண்ணாவிரதம் நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  பாஜக எம்பிக்கள் தங்கள் சம்பளப்பணத்தை வாங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் ஏழு அம்ச திட்டங்களால் மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். அதனை பாஜக தலைவர்கள் எல்லோரும் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்றார்.கிராமங்களுக்கு சென்று மக்களோடு மக்களாகி அவர்கள் வீட்டில் தங்கவேண்டும். எம்பிக்கள் ஒருநாளும், அமைச்சர்கள் 2நாட்களும் கிராமங்களில் செலவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் பிரதமர்.

மராட்டிய அரசர் வீரசிவாஜியின் நாடகத்தை எல்லா எம்பிக்களும் பார்க்க வேண்டும். அவரது வீரம், தியாகத்தை எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும். இந்த நாடகத்தை பார்க்க, குஜராத்தில் இருந்து புனே வந்தேன் என்று கடந்த கால நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார் பிரதமர்மோடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here