காதல் திருமணம் செய்தவரை வெட்டி கொன்ற குடும்பத்தினா்!

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசம் கெட்டியா பகுதியை சேர்ந்தவர் சர்ளா மாலி.
இவா் பங்கஜ் மாலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவா்கள்.இதனால் சர்ளா மாலி மீது அவர் குடும்பத்தினர் கொலை வெறியில் இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பெண்ணின் சகோதரர், தாய்க்கு உடல்நிலை சரியில்லை என கூறி சர்ளாவை அழைத்து வந்துள்ளார். பின்னர் குடும்பத்தினர் கத்தியை பயன்படுத்தி அவரை கொலை செய்துள்ளனர்.இது குறித்து கெட்டியா காவல் நிலைய துணை ஆய்வாளா் ராஜேந்திர இங்லே
கூறுகையில், சர்ளாவின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.அவரின் தாய் மற்றும் சகோதரா் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருவதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here