தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திநேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை வரை தடையை மீறி ஊர்வலமாகச் சென்று மறியலில் ஈடுபட்டனர்.ஸ்டாலினை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர்.
கைது செய்யப்பட்ட ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் புரசைவாக்கத்தில்
உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.அந்த மண்டபத்திலேயே ஸ்டாலின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இளம் ஜோடிக்குதிருமணம் செய்து வைத்தார். மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் அனைவரும் மாலை 4 மணிக்கு பிறகு காவல்துறையினர் விடுவித்தனர். இது குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில் முழு அடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றி என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here