டெல்லியில் வீசிய புழுதிப்புயல்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் திடீரென புழுதிப்புயல் வீசியது. வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் வெப்பம் குறைந்து இருள் சூழ்ந்தது போன்று காணப்பட்டது.தலைநகர் பகுதி, ஆர்.ஏ.புரம், அக்பர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீரென புழுதிப் புயல் வீசியதால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.மணிக்கு 81கிலோமீட்டர் வேகத்தில் புழுதிப்புயல் வீசியுள்ளது. வானம் இருண்டு புழுதிப்புயலால் நகரமே இருண்டுவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.புயல் ஓய்ந்ததும் வானம் மேகமூட்டமாகவும், சிறுதூரலும் இருந்தது. டெல்லியில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து வருகிறது. இன்று அதிகபட்ச வெப்பமாக 36.6டிகிரியும், குறைந்த பட்சமாக 28.4டிகிரியும் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் வெப்பம் சற்று தணிந்தது தற்காலிக நிவாரணமாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here