விஷ எறும்பு கடித்து இந்திய பெண் சவுதியில் பலி

சவுதிஅரேபியா: சூசி ஜெபி கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவா்.
இவா் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.சூசி ஜெபி வீட்டில் இருந்த போது விஷத்தன்மை உடைய எரும்பு அவரை கடித்துள்ளது. இதை தொடர்ந்துஅவரது உடல்நிலை பாதித்துள்ளது. சிகிச்சைக்காக அவரை அருகில் உள்ள மருத்தவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.எறும்பு கடித்து மனிதர்கள் உயிரிழக்கும் வகையான சில விஷ எறும்பு வகைகள் சவுதி அரேபியாவில் அதிகஅளவில் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விஷ எறும்பு கடித்து இந்திய பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here