ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை! 5எம்பிக்கள் ராஜினாமா..உண்ணாவிரதம்!!

டெல்லி: ஆந்திரமாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்பிக்கள் ராஜினாமா செய்துள்ளனர். காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர்கள் துவக்கியுள்ளனர்.ஆந்திரமாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி அதன் நலனுக்கு உதவுவோம் என்று பாஜக உறுதியளித்திருந்தது. தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்தது.மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று தற்போது கைவிரித்துள்ளது. இதனை எதிர்த்து மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் திட்டமிட்டது. இதற்காக 12முறை முயன்றது. ஆனால் முயற்சி பலிக்கவில்லை.இதற்கிடையே, ஆந்திராவில் ஆட்சிசெய்துவரும் தெலுங்குதேசம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. அக்கட்சி அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளனர். பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசமும் முயன்று வருகிறது.இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்பிக்கள் 5பேர் மக்களவையில் இருந்து ராஜினாமா செய்தனர். தங்கள் ராஜினாமா கடிதங்களை துணை சபாநாயகரிடம் அளித்தனர். பின்னர் ஆந்திரபவன் வந்தனர். அங்கு காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கியுள்ளனர்.

இதுகுறித்து ஒய்,எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், சில வாரங்களுக்கு முன் நாங்கள் ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தோம். தற்போது செய்துள்ளோம். தெலுங்கு தேச எம்பிக்களும் ராஜினாமா செய்யவேண்டும். மக்கள் போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here