ரயில் பயணிகள் மீது புதிய வரிச்சுமை!

மும்பை: ரயில் பயணிகள் வாங்கும் உணவு, பானங்கள் மீது 5சதவீதம் சேவை வரி விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ரயில் நிலையங்களிலும், ரயில்களில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசு ஒரே வரிவிதிப்பு முறையாக ஜிஎஸ்டி வரியைக் கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி நடைமுறைப்படுத்தியது.இதில் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுமா என்ற ரயில்வே துறை மத்திய அரசுக்கு விளக்கம் அளிக்க கோரியது. அதைத் தெளிவுபடுத்தி மத்திய அரசு கடந்த 31-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளது.அந்தக் கடிதத்தில் . ரயில் நிலையங்கள், நடைமேடைகள், ரயில்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுகள், குடிநீர், பானங்கள், குளிர்பானங்கள் அனைத்தும் சரிசமமாக 5 சதவீதம் வரி இனி விதிக்கப்படும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவிதமான சந்தேகமும், நிலையற்ற தன்மையும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here