போலீசுக்கு உதவியது வாட்ஸ் ஆப்!! கொள்ளைபோன ரூ.13லட்சம் மீட்பு!

டெல்லி: கொள்ளையனின் செல்போன் உதவியுடன் ரூ.13லட்சம் மதிப்பு பொருட்கள் மீட்கப்பட்டன.
டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் கடந்தவாரம் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்தது.கடையில் இருந்த ரூ.18லட்சம் பணம், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
கொள்ளையர்கள் கடையில் இருந்த ஊழியர்களை கட்டிவைத்து அங்கிருந்து தப்பினர்.
அப்போது கொள்ளையனின் செல்போன் தவறிவிழுந்தது. பரபரப்பில் அதனை கவனிக்காமல் அவன் சென்றுவிட்டான்.


அந்த செல்போனில் இருந்த வாட்ஸ் ஆப் குரூப்பை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் கொள்ளையனின் முழு விபரமும் தெரியவந்தது.

டெல்லி அருகே மவுஜ்பூரில் மொஷினாலம் என்ற முதல்குற்றவாளி கைதானான்.
அவனைத்தொடர்ந்து அடுத்தடுத்து கொள்ளை கும்பல் ஒன்றை போலீசார் வளைத்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.13லட்சம் மதிப்பு நகைகள்,நாட்டுத்துப்பாக்கிகள், ஆவணங்கள் மீட்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here