பல தொகுதிகளில் ஒரு வேட்பாளர் போட்டியிட தடை வருகிறது!

டெல்லி: பொதுத்தேர்தலில் ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், பா.ஜ., பிரமுகரும், வழக்கறிஞருமான, அஷ்வினி குமார் உபாத்யாய் பொதுநலமனு தாக்கல் செய்தார். அதில், ஒரு வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கவும், அது தொடர்பான தேர்தல் சட்டப்பிரிவை ரத்து செய்யவும் கோரி இருந்தார்.
இதுகுறித்து பதில் அளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரு வேட்பாளர், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது, ஒரு தொகுதியில், மறுதேர்தல் நடத்த வேண்டியுள்ளது.இதனால், ஆணையத்துக்கு வீண் செலவு ஏற்படுகிறது; எனவே, ஒரு வேட்பாளர், ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் கருத்தையும் தெரிந்துகொண்ட பின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here