இறந்த தாய் உடல் ஐஸ்பெட்டியில் பாதுகாப்பு! நூதனமாக மகன் பென்சன் மோசடி!

கொல்கத்தா: தாயின் உடலை மூன்று ஆண்டுகளாக ப்ரீசரில் வைத்து அவர் கைரேகையை பயன்படுத்தி பென்ஷன் வாங்கியுள்ளார் மகன்.
கொல்கத்தாவின் பெகாலா பகுதியைச் சேர்ந்தவர் சுபாபிரதா மஜூம்தார்(45).லெதர் டெக்னாலாஜி படித்துவிட்டுத் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்துள்ளார்.
இவரது தாயார் பினா மஜூம்தார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவருக்கு மாதா மாதம் பென்ஷன் வந்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் பினா மஜூம்தார் மரணமடைந்தார்.அந்தச் சமயத்தில் சுபாபிரதாவின் வேலையும் பறிபோனதால் பணக்கஷ்டத்தில் இருந்தார் சுபாபிரதா.
தாயின் உடலில் ரசாயணக்கலவை கொண்டு பூசி, ஐஸ்பெட்டியில் வைத்து பாதுகாத்தார்.
அவரது கைரேகையை பயன்படுத்தி 3ஆண்டுகளாக பென்ஷன் தொகையை பெற்றுவந்தார்.இவர் பயன்படுத்திய ரசாயண கலவையின் துர்நாற்றம் அதிகமாக வெளியேறியது.
சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கூறினர். போலீசாரின் விசாரணையில் உண்மை அம்பலமானது. போலீசார் உடலை கைப்பற்றி எடுத்துச்சென்றனர்.
சுபாபிரதா, அவரது தந்தை இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here