காவிரிநீரை முழுமையாக பெறவேண்டும்!! நடிகர் கமலஹாசன் வலியுறுத்தல்!

திருச்சி: மக்கள் நீதிமய்யம் கட்சியின் கொள்கைகள் குறித்து பட்டியலிட்டார் அக்கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன்.

திருச்சி பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:
மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்கள் என்ன என்று கேள்வி கேட்கிறார்கள். சிலவற்றை இங்கு தெரிவிக்கிறேன்.

கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரைப் பெற்றே ஆக வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்து பெற வேண்டிய நீரையும் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் பெய்யும் மழை நீரை வீணாக்காமல் சேகரிக்க சிறு சிறு அணைகள் கட்டுவோம், ஏரிகளைத் தூர்வாருவோம். சொட்டு நீர்ப் பாசனம் செய்வோம்.போதிய ஊட்டச்சத்து இன்றி 55 சதவிகித பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம், போதிய உடற்பயிற்சி இல்லாமல் 33 சதவிகித பெண்கள் அதிக உடல் எடையால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, அவர்களுக்குச் சேர வேண்டிய சத்து மாத்திரைகள் தரப்படும்.ஆசிரியர்கள் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பணியில் சேர முடியும் என்ற நிலையும் உள்ளது.
பல கோடி பணம் கொடுத்து துணைவேந்தர் பதவியில் அமர்வோர் தேச துரோகிகள். இவர்கள் வியாபாரம் முடக்கப்பட வேண்டும்.
பணி தேடி பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையோ 1 கோடி. இளைஞர்களின் திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் தருவோம்.தவறான இடங்களில், தவறு செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவதை எதிர்க்கிறோம். தரிசு நிலத்தில் மட்டுமே தொழிற்சாலை அமைப்போம்.
காவல் நிலையத்துக்குச் செல்லவே மக்கள் தற்போது அஞ்சுகின்றனர். புலனாய்விலும் அரசியல் தலையீடு உள்ளது. நேர்மையான காவலர் நிலையங்களை அமைக்க முடியும். காவல் துறையின் பலம் விஐபி வேலை, பந்தோபஸ்து என்று வீணடிக்காமல், மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவோம். காவல் துறை சீரமைப்பு வாரியம் அமைப்போம்.69 விழுக்காடு இடஒதுக்கீட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். சிறுபான்மையினர் அச்சமின்றி தங்கள் வாழ்வை நடத்த துணை நிற்போம். திருநங்கைகள் நலனுக்கும் துணை நிற்போம்.
பேரிடர் காலங்களின் மீனவர்களை மீட்க நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இடைத்தரகர் இன்றி அவர்கள் விற்பனை செய்ய உதவுவோம்.
எங்கள் முதல் கையெழுத்து லோக் ஆயுக்தா அமைக்கும் மசோதாவுக்குத்தான். மற்ற கொள்கைகளை பின்னர் சொல்வோம். இவ்வாறு கமல் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here