புலியை அடித்து துரத்திய பெண்! வைரலாகி வரும் செல்பி!!

மும்பை: புலி தாக்கியதில் காயமடைந்த ரூபாலி மெஷ்ராமின் செல்பி, சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.ரூபாலி மெஷ்ராம் இவா் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூா் மாநிலத்தின் புறநகர் பகுதியில் வசிக்கிறார்.இவர், தான் ஆசையுடன் வளர்த்து வந்து ஆட்டுக்குட்டியை வீட்டு வாசலில் கட்டி
வைத்திருந்தார். ஆட்டுக்குட்டியை மோப்பம் பிடித்த புலி அதன் மீது பாய்ந்தது. ஆட்டுக்குட்டியின்அலறல் சத்தம் கேட்டு வெளிய வந்தார் ரூபாலி. ஆட்டுக்குட்டியை காப்பாற்ற புலியுடன் போரடியரூபாலிக்கு வலது கண்ணத்தில் காயம் ஏற்பட்டது.

அங்கு வந்த அவரது தாயார் ஜிஜாபாய் கம்பால் புலியைஅடித்து விரட்டினார். இதில் அவரும் காயமடைந்தார். ரூபாலி ரத்த காயங்களுடன் அவரது தாயுடன் எடுத்தசெல்பி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here