மான் வேட்டை வழக்கு சல்மான்கான் குற்றவாளி

ஜோத்பூா்: “ஹம் சாத் சாத் ஹே” என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு கடந்த 1998-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் கன்கானி கிராமத்தின் அருகே நடைபெற்றது. அதில் சல்மான் கான் நடித்து வந்தார்.அக்டோபர் 1-ஆம் தேதி இரவு சிங்காரா,பிளாக்பெக் போன்ற அரியவகையை சேர்ந்த மான்களை சுட்டுக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அப்போது அவருடன் மற்ற நடிகர், நடிகைகள் உடனிருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அரியவகை மான்களை வேட்டையாடியதாக கடந்த 2007-ம் ஆண்டு சல்மான்கான் உள்ளிட்ட 7 பேருக்கு ஜோத்பூர் கிளை கோர்ட் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த வழக்கில் சல்மான், கோர்ட் நிபந்தனையுடன் ஜாமின் பெற்று படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார்.
இதுதொடர்பாக விசாரணை ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கின் தீர்ப்பை ஜோத்பூா் நீதிமன்றம் இன்று வழங்குவதாக தெரிவித்திருந்தது.
தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு, குற்றம்சாட்டப்பட்ட நடிகர்களான சல்மான் கான், சைஃப் அலி கான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.இதையடுத்து ஜோத்பூர் நீதிமன்ற தலைமை நீதித்துறை நடுவர் தேவ் குமார் கத்ரி தீர்ப்பளித்தார்.இந்த தீர்ப்பில் மான் வேட்டையாடிய போது சல்மான் கானுடன் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த சோனாலி பிந்த்ரே, தபு, சயீப் அலிகான், நீலம் உள்ளிட்டோரை விடுவித்தது.
மேலும் அரிய வகைமான்களை வேட்டையாடிய பாலிவுட் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here