காவிரி போராட்டம் வேண்டும்! கிரிக்கெட் போட்டியும் வேண்டும்!!

மயிலாடுதுறை:காவிரி வாரியம் அமைக்கும் போராட்டம் தேவை. அதற்காக கிரிக்கெட் போட்டி வேண்டாம் என்பது தேவையற்றது என்று காங்கிரஸ் பிரமுகர் தெரிவித்துள்ளார்.                                                                                          காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அளித்த பேட்டி: தமிழக மக்கள் திருடனையும் எச்.ராஜாவையும் ஒன்றாக பார்த்தால், திருடனை விட்டுவிட்டு, எச்.ராஜாவையே விரட்டி, விரட்டி அடிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர்.மத்திய அரசு தமிழக மக்களை வேண்டுமென்றே ஏமாற்றி வருகிறது. தமிழிசை சவுந்தராஜன் மூன்று வாரத்திற்குள் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என கூறியிருக்கிறார்.பாஜகவினருக்கு பொய்சொல்வதே பிழைப்பாகிவிட்டது.

 

மோடி விரைவில் வரவிருக்கிறார். அவருக்கு தகுந்த பாடம் தமிழர்களால் கற்பிக்கப்படும்.
ஆளும் அதிமுக பி.ஜே.பியின் காலடியிலேயே கிடக்கிறது. அவர்கள் உண்ணாவிரதம் கண்துடைப்பு நாடகம்.

காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினை தொடர்பாக சென்னையில் ஒதுக்குப்புறமாக நடக்க இருக்கும் ஐ.பி.எல் போட்டியை நிறுத்த வேண்டும் என கூறுவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here