காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தல்! அனைத்து கட்சி போராட்டம், கடையடைப்பு!!

சென்னை: காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற தமிழக பந்த் அமைதியாக நடந்து முடிந்தது.
காவிரி வாரியம் அமைக்க அனைத்து கட்சி சார்பில் முதல் கட்ட போராட்டமாக இன்று கடையடைப்பு நடந்தது.தமிழகம் முழுவதும் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் பல லட்சம் பேர் கைதாகினர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.மெரினா கடற்கரை முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் மற்றும் கட்சித்தலைவர்கள் கைதாகி புரசவைவாக்கம் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது:இதற்கு முன்பு தமிழகத்தில் இப்படியொரு முழு அடைப்பு நடந்திருக்குமா என்று கேள்வி எழுப்பும் அளவுக்குப் போராட்டம் நூறு சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது.
ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுப் பத்து லட்சம் பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. போராட்டத்தால் மக்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை. மக்களே முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.


மாலையில் வெளியான காவல்துறை அறிக்கையில், தமிழகம் முழுவதும் 85ஆயிரம் பேர் கைதாகி விடுவிக்கப்பட்டனர். 41பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here