யூடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில்: சான் பிரான்சிஸ்கோவில் உள்ள யூடியூப் தலைமையகத்தில்
துப்பக்கிச் சூடு நடைபெற்றது. இச்சம்பவத்தில் 4 போ் காயமடைந்துள்ளனர்.பின்புற வாசல் வழியாக பெண் ஒருவா் அலுவலகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் பெண் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனா்.ஊழியர்கள் அங்குமிங்கும் ஓடுவதைக் கண்டு முதலில் ஏதோ நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதோ என்றே கருதினேன். பிறகு தான் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்.  துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்து.பின்னர் நாங்கள் அனைவரும் முன்வாசல் வழியாக வெளியேறினோம் என்று யூடியூப் பிராடக்ட் மேனேஜர் டோட் ஷெர்மேன் கூறுனார்.சம்பவம் குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்க யூடியூப் தலைமைச் செயலர் சூசன் வோஜிக்கி மறுத்துவிட்டார்.இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிட்சை எனக்கு கிடைத்த கடைசி தகவலின்படி இந்த சம்பவத்தில்4 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறினார். மேலும் ஊழியர்களுக்கு ஆறுதலை தெரிவித்து உள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here