Connect with us

National

காவிரி போராட்டத்தை கைவிடுங்கள்! தலைமை நீதிபதி கோரிக்கை!!

Published

on

டெல்லி: காவிரி வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தில் நடந்துவரும் அனைத்து போராட்டங்களும் கைவிடப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கோரியுள்ளார்.தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் உமாபதி ஒரு வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வில் ஆஜரானார். அவரிடம் தலைமை நீதிபதி கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் ஏன் இத்தனை போராட்டங்கள் நடைபெறுகின்றன.  தமிழக மக்கள் அமைதிகாக்க வேண்டும். காவிரி விஷயத்தில் தமிழகத்தின் நிலைமையை உச்சநீதிமன்றம் நன்கு தெரிந்து வைத்துள்ளது. 

 

காவிரி தொடர்பான வழக்கு விசாரணை 9ம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். மக்கள் போராட்டங்களை கைவிடவேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator