குப்பை வண்டியில் எடுத்துச்செல்லப்பட்ட உடல்! சோளிங்கரில் பரிதாபம்!

வேலூர்: சோளிங்கரில் முதியவர் உடலை புதைக்க குப்பை அள்ளும் ரிக்‌ஷாவில் எடுத்துச்செல்லப்பட்டது.
இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி கடும் கண்டனத்தை பெற்றுவருகிறது.வேலூர் மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜாராம் (70).
பிள்ளைகளால் கைவிடப்பட்டு சோளிங்கர் பகுதியிலேயே பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார்.
கடந்த 27-ம் தேதி கிடந்த அவர் சாலையிலேயே உயிரிழந்தார்.
அவரது பிணத்தை கைப்பற்றிய சோளிங்கர் போலீஸார் அவரது மறைவு குறித்து அறிவிப்பு வெளியிட்டனர்.

உறவினர்கள் அவரது உடலை அனாதைப்பிணமாக கருதி அடக்கம் செய்ய வேண்டினர்.
சோளிங்கர் பேரூராட்சியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உடலை குப்பை அள்ளும் வண்டியில் சுடுகாட்டுக்கு எடுத்துவரப்பட்டது.
பேரூராட்சியின் அமரர் ஊர்தி என்ன ஆனது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here