விடுதலைப்புலிகள் தலைவருடன் சீமான் சந்திப்பு! உண்மையை போட்டுடைத்தார் வைகோ!!

ஆண்டிப்பட்டி: நியுட்ரினோ திட்டத்துக்கு எதிராக நடைப்பயணம் மேற்கொண்டுவரும் வைகோ, ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நாம் தமிழா் கட்சி சீமானை நேரிடையாக விமர்சித்தார்.என்னை தமிழன் அல்ல தெலுங்கன் என்றும் சீமான் கீழ்த்தரமாக பேசி வருகிறார்.
ஈரோடு ராமசாமி நாயக்கர் பயல் என்றும் பேசி வருகிறார். 8 ஆண்டுகளாக நான் பொறுமையாக இருக்கிறேன்.அண்ணாதுரை என்ற முட்டாள் தமிழகத்தை கெடுத்துவிட்டார் என்றும், பெரியாரையும் தாக்கிப் பேசினார். அவர்களை தாக்கிப் பேசுவது மறைமுகமாக என்னைத் தாக்குவதற்காகவே என்பதை பிறகுதான் தெரிந்து கொண்டேன்.விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என்று கருதிக் கொண்டு,
அவரோடு பழகியவர் போல பொய் கூறிவருகிறார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சீமானை சந்திக்க வெறும் 8 நிமிடம்தான் அனுமதித்தார். புகைப்படம் எடுக்கக் கூட அனுமதிக்கவில்லை. பிரபாகரனுடன் சீமான் எடுத்ததாக உலா வரும் புகைப்படம் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டவை.நான் ஒரு மாத காலத்துக்கும் மேல், விடுதலைப் புலிகள் இயக்க சீருடை அணிந்து
கொண்டு பிரபாகரனுடன் இருந்தவன் என்று வைகோ தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here