இசையமைப்பாளரின் திருட்டு போன கார்! கண்டு பிடித்த போலீஸார்!!

சென்னை: சென்னை எழும்பூரில் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா அடுக்குமடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.உயர் ரக சொகுவு காரை இவரது மனைவியின் உபயோகத்திற்காக வைத்துள்ளார். கார் காரின் ஓட்டுநராக சாதிக் என்பவர் வேலை செய்கிறார். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா வெளியூர் சென்று விட்டார். வீட்டில் அவரது உறவினர்கள் இருந்துள்ளனர்.நேற்று மாலை 5 மணி அளவில் ஓட்டுநர் நவாஸ் காரை எடுத்து கொண்டு சென்றவர் இரவு வரை திரும்பவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் கார் டிரைவா் மீது போலீஸில் கார் திருட்டு புகார் அளிக்கப்பட்டது.இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். டிரைவருக்கு போலீஸார் போன் செய்தபோதும் சுவிட்ச ஆஃப் செய்ய பட்டிருந்தது. உடனடியாக போலீஸார் விசாரணையில் இறங்கினா்.செல்போன் டவரை சோதித்த போது டவர் சென்னை எழும்பரை காட்டியுள்ளது.டவர் எழும்பூரில் எந்த இடத்தில் யுவன் சங்கர் ராஜா ஏரியாவே காட்டியிருக்கிறது.இதனால் குழப்பமான போலீஸார் யுவன் சங்கர் ராஜா அபார்ட்மெண்டுக்கு போயுள்ளனர். அங்கிருந்தவா்களிடம் ‘காரை எங்கே நிறுத்துவீர்கள்’ என்று விசாரித்துள்ளனர்.அவா்கள் வழக்கமாக கார் நிறுத்தும் இடத்தைக் காட்டியுள்ளனர்.இது தவிர வேறு எங்கெங்கு கார் நிறுத்தப்படும்’ என்று கேட்டனர். ‘தரைத்தளத்தில் கீழே கார் பார்க்கிங் உள்ளது. ஆனால் அங்கு நிறுத்த மாட்டோம்’ என்று தெரிவித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் அங்கு சென்று பார்த்த போலீஸார் காணமல் போன கார் அங்கே நின்றுள்ளதை பார்த்து அதிர்ந்து போயினர்.கார் காணவில்லை என்று புகார் செய்தீர்கள். கார் இங்கேயே நிற்கிறது என்று கேட்டுள்ளனர். ‘அதுதான் சார் எங்களுக்கும் தெரியவில்லை.நாங்கள் இங்கே பார்க்கவில்லைஎன்று யுவன் தரப்பினர் அசடு வழிந்துள்ளனர்.போலீஸார் காருக்கு அருகில் தூங்கி கொண்டிருந்த டிரைவரை எழுப்பினர்.தூக்கத்தில் இருந்து விழித்த டிரைவர், போலீஸார் மற்றும் அங்குள்ளவா்களை பார்த்து என்ன சார் ஏதாவது பிரச்சினையா?’ என்று கேட்டுள்ளார். அதற்கு போலீஸார் நீதான்யா பிரச்சினை என்று கூறி கார் எப்படி இங்கு வந்தது? என்று கேட்டுள்ளனர்.அதற்கு டிரைவா் எனக்கு உடல்நிலை சரியில்லை. அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன். இரவு படுத்தால் மதியம் 12 மணிக்குதான் எழுந்திருப்பேன்’ என்று கூறியுள்ளார்.காரை இங்கு ஏன் நிறுத்தினாய் என்று கேட்டதற்கு, காரை நிறுத்த மேலே இடமில்லை.அதனால் காரை இங்கே நிறத்தி விட்டு தூங்கிவிட்டேன் என்று டிரைவர் சாதிக் கூறியுள்ளார்.மேலும் சார்ஜ் இல்லாமல் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கார் திருட்டு சம்பவம் முடிவுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here