காவிரி வாரியத்துக்காக கிரிக்கெட் ரசிகர்கள் முன்வருவார்களா?

சென்னை: காவிரி வாரியம் பிரச்சனையில் சர்வதேச கவனத்தை ஈர்க்க யோசனை தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
தனது ப்ளாக்கில் அவர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 10ஆம் தேதி சி.எஸ்.கே.வின் முதல் மேட்ச்.
50 ஆயிரம் பேர் அமரக் கூடிய சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் காலியாகத் தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம்.
இந்தப் போட்டியை உலகம் முழுக்க டி.வி.யில் காண்பவர்களுக்கு காரணம் தெரியவரும்.நம் போராட்ட நோக்கம், ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல் ஒரு சின்ன தியாகத்தால் சென்று சேர்ந்துவிடும்.
அந்த ஒருநாள் ஸ்டேடியத்துக்குச் செல்ல வேண்டாம் என்பதுதான் வேண்டுகோள்.
வீட்டில் அமர்ந்து பாருங்கள். ஒரு 50 ஆயிரம் பேர் மட்டுமே செய்வது இந்தத் தியாகம்.
ஆனால், 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்.இதனால் மற்ற யாருக்கும் எந்தத் தொல்லையோ, நஷ்டமோ இல்லை என்பதையும் நினைவூட்டுகிறேன்.
நமது நட்சத்திர வீரர்களுக்கு அவர்களுடைய ஊதியத் தொகையில் எந்தப் பாதிப்போ, தொலைக்காட்சி வருமானத்திற்கோ, சி.எஸ்.கே.வுக்கு இழிவோ (மாறாக, அவர்களும் இதை மனதார ஆதரிப்பார்கள்) எதுவும் கிடையாது.இதனால், ஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின், உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம். இவ்வாறு பதிவிட்டுள்ளார் ஜேம்ஸ்வசந்தன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here