மலருக்கு கவசம் போட்ட மல்லு நடிகர்!

சென்னை:  மலராக வந்து மணம் வீசியவர் அந்த நடிகை சூட்டிங் ஸ்பாட்ல யார் கூடவும் பேசுறதேயில்லை. தாய் மொழியில் நடிக்க நிறையவே பிகு பண்ணினார். ஒரு வழியாக ஒரு படத்தில் நடித்தாலும் யாருடனும் பேசாமல் தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கிறார்.இதுக்கெல்லாம் காரணம் மல்லு நடிகர்தானாம். யார் கூடவாவது பேசினாலோ, சிரித்தாலோ அப்புறம் அனாவசியமாக வதந்தி கிளம்பும், கிசுகிசு வரும் என்று கிளப்பி விட்டதே அந்த இளம் நடிகர்தானாம்.                                                                            எதுக்கு தேவையில்லாத வம்பு என்று அந்த நடிகர் சொன்னதைக் கேட்டு பல அடி தூரம் தள்ளி நின்றே பழகுகிறாராம் மலர்.                                                                    எத்தனை அடி தூரம் தள்ளி நின்றாலும் மலரின் மணம் வீசாமல் போயிருமா என்ன என்று கூறி நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here