மாற்றுத்திறனாளி சான்றிதழ்! கணவரை தோளில் சுமக்கும் மனைவி!!

உத்தரபிரதேசம்: மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற கணவரை தோளில் சுமக்கும் மனைவியைக்கண்டு மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம் மதுரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது மாற்றுத்திறனாளிகணவருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மாற்றுத்திறனாளி வாகனம் பெற விண்ணப்பித்திருந்தார். இதற்கு மருத்துவரின் சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது. இதற்காக அவர் தனது கணவரை தோளில் சுமந்து கொண்டு மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ் பெற மருத்துவர்களிடம் சென்றுள்ளார். சான்றிதழ் கிடைக்க தினமும் அலைந்து திரிவதாக தெரிவித்துள்ளார். ஆனால் சான்றிதழ் கிடைக்கவில்லை என்று மனவேதனையுடன் கூறியுள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரபிரதேச அமைச்சர் புபென்தரா சௌத்ரி இது ஒரு
சோக சம்பவம். இதை நாங்கள் ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய சான்றிதழ் கிடைக்க
நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here