மோடியை கிண்டலடித்த ஆந்திர முதல்வர்!

டெல்லி: தலைநகரில் முகாமிட்டுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. மோடி பிரதமர் பொறுப்பேற்று நாடாளுமன்றத்துக்கு முதன்முறை வரும்போது நாடாளுமன்றத்தின் படிகளில் தலைவணங்கி உள்ளே சென்றார்.

அவரைப்போன்று நாடாளுமன்றத்தை தொட்டு வணங்கியபின் உள்ளே சென்றார் ஆந்திர முதல்வர்.     நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருகிறது தெலுங்குதேசம்.   அதற்கு ஆதரவு அளிக்குமாறு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து கோரிக்கை விடுத்தார் சந்திரபாபுநாயுடு.  அதிமுக சார்பில் மைத்ரேயனையும் அவர் சந்தித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு கூறுகையில்,  மத்திய அரசு  ஆந்திராவுகுக் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக உறுதியளித்தது.  கடைசி பட்ஜெட் வரை அந்த அறிவிப்புக்காக காத்திருந்தேன். ஐந்து கோடி ஆந்திர மக்களை மத்திய அரசு ஏமாற்றிவிட்டது.                                                                                                கூட்டணியில் தொடர்கிறோம், சிறப்பு அந்தஸ்து உத்தரவை பிறப்பியுங்கள் என்று பிரதமரிடம் கோரினேன். அவர் செவிசாய்க்கவில்லை. 

 

 

கடந்த நான்கரை ஆண்டுகளில் 29முறை டெல்லி வந்தேன். ஒவ்வொரு முறை பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்திக்கும்போதும் இக்கோரிக்கையை முன்வைத்தேன். பலனில்லை.    பாஜகவுக்கு பல்லக்கு தூக்கும் கட்சிகள்தான் கூட்டணியில் நீடிக்க முடியும் என்ற சூழலை உருவாக்கி விட்டது. 

முதல் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து அளித்திருந்தால் ரூ.5ஆயிரம் கோடி மிச்சமாகி இருக்கும். மாநிலம் உயர்ந்த நிலையை அடைந்திருக்கும்.  நிதிக்கமிஷன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று காரணம் கூறுகிறார்கள். நிதிக்கமிஷன் பரிந்துரையை ஏற்றுக்கொண்டா 11மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தார்கள். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேட்டியளித்தார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here