ஐந்து சாமியார்களுக்கு அமைச்சர் அந்தஸ்து!

போபால்: நர்மதை நதியை பாதுகாக்கும் விஷயத்தில் அக்கறை காட்டிய 5சாமியார்களுக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச பாஜக அரசு இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அம்மாநிலத்தில் உள்ள கம்ப்யூட்டர் பாபா, நர்மதானந்த மகாராஜ், ஹரிஹரானந்த் மகாராஜ், பய்யு மகாராஜ், யோகேந்திர மகான் ஆகிய ஐந்துபேருக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

நர்மதை நதியை பாதுகாத்து மாநிலத்தின் சுற்றுச்சூழலை வளப்படுத்தும் பணிகளை இவர்கள் ஐந்துபேரும் மேற்கொள்வார்கள். பொதுமக்களின் பங்களிப்புடன் அதற்கான செயல்திட்டங்கள் இருக்கும் என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு குறித்து பேட்டியளித்துள்ள கம்ப்யூட்டர் பாபா, அரசு அறிவிப்பில் தவறு ஒன்றும் இல்லை. எங்கள் பணிக்கு அரசு அளித்த வெகுமதியாக இதனை ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.இந்த அறிவிப்பை விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பார், காவிகளுடன் கூடி தேர்தலில் வெற்றிபெறலாம் என்று நினைத்துள்ளார் முதல்வர். அவரும் ஒரு தலைமை பூசாரியை போன்று செயல்படுகிறார் என்று விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here