வங்கி சேவையில் ஜியோ!

மும்பை:ஜியோ நிறுவனம் பேமெண்ட் பாங்க் என்ற சேவையை புதிதாக துவக்குகிறது. ரிசர்வ் வங்கி அதற்கான அனுமதியை அளித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கி கட்டுப்பாட்டுச்சட்டம் 1949, பிரிவு 22(1)ன் கீழ் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
பேமண்ட் பேங்க் எனப்படும் வங்கி சேவையை துவக்க 11 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு நிறுவனம் ஜியோ.இதனைத்தொடர்ந்து சேமிப்பு கணக்கு வசதி, பணம் அனுப்புவது, பெறுவது, பிற நாணயங்களை மாற்றிக்கொள்வது ஆகிய சேவைகளை ஜியோ அளிக்கும்.
2016ம் ஆண்டு 4ஜி சேவையை வோல்ட் தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தியது ஜியோ.
தற்போது இந்தியாவின் நம்பர்1 தொலைத்தொடர்பு நிறுவனமாக உயர்ந்துள்ளது.ஜியோவின் ப்ரைம் கஸ்டமர்ஸ் எனப்படும் தொடக்க வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு சலுகையை நீடித்துள்ளது ஜியோ .
இந்நிலையில் தற்போது வங்கி சேவையையும் துவக்க உள்ளது. எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து பேமெண்ட் சேவைகளை துவக்கவுள்ளது ஜியோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here