இசையமைப்பாளர் சொகுசுகார் திருட்டு!

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சொகுசுகாரை டிரைவர்
திருடிச்சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான
யுவன்சங்கர் ராஜா திருமணமாகி மனைவியுடன் சென்னை எழும்பூர் அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார்.இவரது மனைவியின் பயன்பாட்டுக்காக ஆடி ஏ-6 உயர் ரக கார் வைத்துள்ளனர்.காரை ஓட்டுவதற்கு நவாஸ்கான் சாதிக் என்கிற ஓட்டுநரை நியமித்துள்ளனர்.
யுவன்ஷங்கர் ராஜா மதுரை சென்றுள்ளார். வீட்டில் அவரது மனைவியும் உறவினர்களும் இருந்துள்ளனர்.மாலை 5மணி அளவில் ஓட்டுநர் நவாஸ் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.இரவுவரை திரும்ப வரவில்லை. அவர் செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. காருடன் ஓட்டுநர் நவாஸ் தலைமறைவானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here